ரூ.50 லட்சம் கோடி இழப்பு: இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு 5 முக்கிய காரணங்கள் – இப்போது முதலீடு செய்யலாமா?

அமெரிக்க பங்குச் சந்தையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது நேரடியாக நமது பங்குச் சந்தையைப் பாதிக்கும். அங்குள்ள முதலீட்டாளர்களின் திட்டங்கள் மாறினால், அதுவும் நமது பங்குச் சந்தைகளையே முதலில் பாதிக்கும்.பத்து ஆண்டுகளாக இதுபோன்று நடப்பது குறைந்திருந்தாலும், கடந்த மூன்று மாதங்களாக பங்குச் சந்தைக் குறியீடுகள் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன.இதுவரை இல்லாத அளவில், இந்த ஆண்டு செப்டம்பரில் சென்செக்ஸ் 85,978 புள்ளிகள் என்ற உச்சத்தைத் தொட்டது.