பொதுத் தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை ALM Athaullah உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸ் தலைவர் ALM Athaullah அவர்கள், இன்று தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என்பதையும் கடந்த தேர்தல் காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக தன்னை குறிவைத்து பின்னப்பட்ட பல நகர்வுகளையும் இடையூறுகளையும் உள்ளடக்கிய பல்வேறு விடயங்கள் இம்மனுவில் விஷேடமாக உள்ளடக்கப்பட்டிருந்தது. நியாயத்திற்காக எப்போதும் குரல் கொடுக்கும் தேசிய காங்கிரஸ் இது தொடர்பான விரிவான விளக்கங்களை மிக விரைவில் மக்கள் மன்றில் சமர்ப்பித்து அதன் அரசியல் போராட்டத்தை தொடரும் என்பதை இத்தால் அறியத் தருகிறோம் என்பதாய் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அநுர குமாரவின் அமைச்சரவை, முந்தைய அமைச்சரவையை விட மாறுபட்டதா? – தமிழர்களுக்கு எத்தனை இடம்?

இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில், இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.21 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.பிரதமராக ஹரினி அமரசூரிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி ஆகிய அமைச்சு பொறுப்புக்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாக இந்திய வம்சாவளி மலையக பெண்கள் 3 பேர் தேர்வு

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகளவிலான பெண் உறுப்பினர்கள் தெரிவான தேர்தலாக இந்த முறை நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் பதிவாகியுள்ளது.இந்த தேர்தல் முடிவுகளில் பிரகாரம், இந்த முறை நாடாளுமன்றத்திற்கு 21 பெண்கள் தெரிவாகியுள்ளனர்.இவ்வாறு தெரிவான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகளவானோர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக பெண்கள், இந்த முறை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழர் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி – தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல் எதிர்காலம் என்ன?

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியுள்ளது.தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சிகள் பின்னடைவை சந்திக்க என்ன காரணம்? இனி தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்காலம் என்ன? இலங்கையில் பாரம்பரிய தேசியக் கட்சிகளை முறியடித்து பெருவெற்றி கண்டுள்ள தேசிய மக்கள் சக்தி, தமிழர் பகுதிகளிலும் வெற்றியை ஈட்டியது எப்படி?
தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல் எதிர்காலம் என்ன?

இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.யாழ்ப்பாணத்தில் மொத்தமுள்ள 6 இடங்களில் மூன்று இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களை இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சுயேச்சைக் குழு ஒன்று ஆகியவை பகிர்ந்துகொண்டிருக்கின்றன.தமிழரசுக் கட்சி வலுவாக உள்ளதாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தில், தேசிய மக்கள் சக்தி மூன்று இடங்களைப் பெற்றதும் சுயேச்சையாக ஒருவர் தேர்வானதும் தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? அரசியல் விமர்சகர்கள் இதை எப்படி பார்க்கின்றனர்?