அறிவியல்

பிரிட்டனில் ஏலம் விடப்பட இருந்த இந்தியரின் மண்டை ஓடு – மீட்கப் போராடும் பழங்குடியினர்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 19-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மண்டை ஓடு, கடந்த மாதம் பிரிட்டனில் ஏலத்திற்கு வைக்கப்பட்டதை கண்டு எலன் கொன்யாக் அதிர்ச்சியடைந்தார்.நாகலாந்து மாநிலத்தில் இருந்து, ஐரோப்பிய காலனித்துவ நிர்வாகிகள் சேகரித்த ஆயிரக்கணக்கான பொருட்களில், நாகா பழங்குடியினரின் கொம்பு மண்டை ஓடும் அடங்கும்.இந்த மனித எச்சங்களை திரும்ப கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நாகா நல்லிணக்க மன்றத்தின் (Forum for Reconciliation- NFR) உறுப்பினர் கொன்யாக், ஏலம் பற்றிய செய்தி தன்னை தொந்தரவு செய்ததாக கூறுகிறார்.”21-ஆம் நூற்றாண்டில் நமது மூதாதையரின் மனித எச்சங்களை மக்கள் இன்னும் ஏலம் விடுவதைப் பார்ப்பது அதிர்ச்சியாக இருந்தது,” என்று அவர் கூறினார். “உணர்ச்சியற்ற இந்த செயல் மிகவும் புண்படுத்தியது ” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டன் செயற்கைக்கோளை நகர்த்தியது யார்? விண்வெளியில் நடந்தது என்ன? விடை தெரியாத மர்மம்

பிரிட்டனின் மிகவும் பழமையான செயற்கைக்கோள் ஒன்று விண்வெளியில் வெகு தூரம் நகர்ந்துள்ளது. யாரால், எப்போது, எப்படி, ஏன் நகர்த்தப்பட்டது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
நிலவுக்கு மனிதன் அனுப்பப்பட்டு சில மாதங்களே ஆகியிருந்த நிலையில் ஸ்கைநெட் 1ஏ என்ற அந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. 1969-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரைக்கு மேலே, பிரிட்டன் துருப்புகளுக்கான தொலைதொடர்பு சேவைகளுக்காக இந்த செயற்கைகோள் நிறுவப்பட்டது.சில ஆண்டுகளில் செயலிழந்த அந்த செயற்கைக்கோளை புவிஈர்ப்பு விசை மேலும் கிழக்கு நோக்கி இந்திய பெருங்கடலுக்கு மேலே நகர்த்தியிருக்க வேண்டும்.ஆனால் இன்று, 2024-ல், ஸ்கைநெட்1ஏ செயற்கைக்கோளை, தான் இருந்த இடத்தில் இருந்து புவியின் பாதி சுற்றளவை கடந்து அமெரிக்காவுக்கு மேலே 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் நிலை கொண்டுள்ளது.

ரஷ்ய ராணுவம் பயிற்றுவித்த ‘உளவு திமிங்கலம்’ தப்பியது எப்படி? என்ன ஆனது?

கழுத்துப் பட்டையுடன் பெலுகா திமிங்கலம் ஒன்று நார்வே கடற்கரைக்கு வந்தது எப்படி? என்ற மர்மத்திற்கு இறுதியாக தற்போது விடை கிடைத்துள்ளது.உள்ளூர் மக்களுக்கு இந்த திமிங்கலம் ஒரு செல்லப்பிராணி. அதற்கு அவர்கள் ‘ஹ்வால்டிமிர்’ என்று பெயரிட்டுள்ளனர்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2019 ஆம் ஆண்டு , கடற்கரையில் காணப்பட்ட போது இந்த திமிங்கலம் பேசுபொருளானது. இந்த வெள்ளைத் திமிங்கலம் ரஷ்யாவின் உளவாளியாக இருக்கலாம் என்றும் சில ஊகங்கள் எழுந்தன.இது குறித்து “வெள்ளைத் திமிங்கல ஆய்வாளர்” முனைவர் ஓல்கா ஷபக் கூறும்போது, “இந்த திமிங்கலம் ராணுவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நம்புவதாகவும், ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒரு கடற்படைத் தளத்திலிருந்து தப்பி இருக்கலாம்” எனவும் கூறினார்.

Scroll to Top